Home / Editorial
Editorial
இந்த 4 டிப்ஸை பயன்படுத்தி வழுக்கை தலையிலும் முடி வளர செய்யலாம் : அட நம்புங்க...
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
நம் தலையில் 1 இலட்சத்துக்கும் மேலான முடி இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் முடி உதிர்த்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.  ஆனால், எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அளவில் தலைமுடி உதிர்கிறதோ, அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இதைதான் "அலோப்பேசியா ஏரியேட்டா" என்று அழைப்பர்.  இந்நிலை இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் ஆனால் மீண்டும் முடி வளராமல் வழுக்கை ஏற்படும். பொதுவாக இப்பிரச்சனையால் 40-45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதத்தில் பித்தம் உடலில் அதிகம் இருந்தால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.  இதற்கு  மருந்தையும் ஆயுர்வேத மருத்துவமே கூறுகிறது. அதன்படி செய்தால் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் தலைமுடியை வளரச் செய்யலாம்.  டிப்ஸ் 1: பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு மருத்து குணம் நிறைந்த மூலிகை தான் துளசி. இந்த துளசி தலைமுடியின் வலிமையை மேம்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும் உதவும். பயன்படுத்தும் முறை  துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும். டிப்ஸ் 2: பிராமி என்னும் ஆயுர்வேத மூலிகை, பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் இந்த மூலிகை மயிர்கால்களை வலிமையடையச் செய்யும். பயன்படுத்தும் முறை  நாட்டு வைத்திய கடைகளில் பிராமி எண்ணெய் விற்கப்படும். அந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி வந்தால், வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். டிப்ஸ் 3: திரிபலா என்பது மூன்று மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேதத்தில் தலைமுடி பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் ஓர் அற்புதமான பொருள். இதனை மாத்திரை வடிவிலோ, டீ அல்லது பொடி வடிவிலோ பயன்படுத்தலாம். இது தலையில் உள்ள திசுக்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்யும். பயன்படுத்தும் முறை  திரிபலா பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 3-4 முறை தடவி ஊற வைத்து அலசி வர வேண்டும். டிப்ஸ் 4: ஆளி விதையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், வழுக்கையைத் தடுக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆளி விதையை உணவில் சேர்த்து வருபவர்களின் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும். இதற்கு ஆளி விதையில் உள்ள சத்துக்கள் தான் காரணம். பயன்படுத்தும் முறை  ஆளி விதையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதற்கு ஆளி விதையை மில்க் ஷேக் உடன் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் ஆளி விதையை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வரலாம்.
உங்களுக்கு குளிக்க தெரியுமா...? இதுவரை இப்படி குளித்தது தவறு..!
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
குளிக்காமல் எந்த காரியத்தையும் செய்ய மனதே வராது அல்லவா...வெளியில் கூட செல்ல முடியாது அல்லவா..? சரி ஒரு சிலர் காக்கா குளியல் போட்டு உடனே வெளியில் வந்து விடுவார்கள்.... குளிக்கும் முறையில் கூட ஒரு சில முறைகள் உள்ளது.. நாம் எப்படி குளிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க... குளியல் = குளிர்வித்தல் மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். உடலில் அதிகமாக உள்ள வெப்பத்தை குளியல் மூலம் எப்படி வெளியேற்ற முடியும் என்பதை பார்க்கலாம் இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம். பொதுவாகவே வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்கலாம் குளிக்கும் முறை : நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இதேபோன்று உச்சதலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள். இதேபோன்று குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது. குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன் குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர். இனியாவது எந்த நேரத்தில் எப்படி குளிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு குளிப்பது ஆக சிறந்தது
பெண்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது...
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
மார்பகப் புற்றுநோய் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை. பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி இருந்து வலி இல்லை என்றாலும் அபாயமே. அதனால் அவர்களும் மருத்துவரை சந்திக்க வேண்டும். 1. மேமோகிராஃபி:- மேமோகிராஃபி என்று அழைக்கப்படும் முலை ஊடு கதிர்ப் படம். மேமோகிராஃபி இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மேல் மார்பகத்தை வைக்க வேண்டும். அந்த மார்பகத்தின் மீது ஒரு அழுத்தும் கருவி வைக்கப்படும். மார்பகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாக அறிய முடியும். பல்வேறு கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய வேண்டும். இந்த முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு வேதனை அதிக அளவில் இருக்கும். இதனால், பல பெண்கள் மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்து அதைத் தவிர்ப்பார்கள். 2. நவீன மேமோகிராஃபி பரிசோதனை:- மேமோகிராஃபி இயந்திரம் நவீனமாகிவிட்டது. மார்பகத்தை வைக்கும் தட்டு அப்படியே இருக்கும். ஆனால், முன்பைப்போல அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை இல்லை. அதற்குப் பதில் ஊடு கதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் மார்பில் செலுத்தி மார்பின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காண முடிகிறது. இதில் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த ஊடு கதிர்களால் ஆபத்து விளையுமோ என்று அச்சப்படத் தேவை இல்லை. இந்த ஊடு கதிர்களின் அபாயத்தன்மை மிக மிகக் குறைவு. மேலும், இந்தப் பரிசோதனை முழுக்க முழுக்கப் பெண்களாலே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியம் இல்லை. புற்று நோய்க்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் உறுதி. தாமதமாகக் கண்டறியும் பட்சத்தில், முதலில் மார்பகத்தை எடுக்க வேண்டி வரும். அப்போதும் எலும்புகள் வரை புற்று நோய் பரவி இருந்தால், உயிர் பிழைப்பது கடினம்! ஒரு பக்கத்தின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கத்தின் மார்பகத்திலும் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இளம் பெண்களுக்கு இந்த நோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்பார்கள். இதனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிட முடியும். தேவைப்பட்டால் மட்டுமே, மேமோகிராஃபி மேற்கொள்ள வேண்டும். வயதான பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானதும், மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதிலிருந்து தப்புவதற்கான வழியும் ஆகும்.
ஆண்கள் எந்த லிமிட்டுடன் பெண்களிடம் பழக வேண்டும் தெரியுமா ..?
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
வாலிப வயதில், வயது வந்த பெண்களை பார்க்கும் போது ஒரு விதமான காதல் கொள்ள மனம் முற்படும். இது இயல்பான ஒன்றாக தான் இருக்கும்.பொதுவாகவே பெண்களின் உடல் அமைப்பை பார்க்கும் போது ஆண்களுக்கு, அந்த பெண்ணின் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் கண் பார்வை செல்வது  இயல்பு. ஆண்களின் இயற்கை குணமே அப்படித்தான்... இது போன்ற தருணத்தில் தான் ஆண் பெண்ணை நோக்கி செல்வது, அவள் மீது ஆசைக்கொள்வது என எது வேண்டுமென்றாலும் தோன்றலாம்.ஆனால் இந்த தருணத்தில் நாம் அடுத்து எடுத்து வைக்கும் படி தான் மிக மிக முக்கியம். ஒரு பெண்ணை பார்த்து பிடித்து விட்டால், அந்த பெண்ணை எதற்காக பிடிக்கிறது ..? அவள் மீது காதலா..? தன்னுடைய விருப்பத்தை சொல்லலாமா..? என பல்வேறு  கேள்விகள் எழும்  அப்போது அந்த பெண்ணுக்கும் தன் மீது விருப்பம் உள்ளது என்பதை உறுதி செய்த  பின்னரே அந்த பெண்ணிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதை பற்றி கவனிக்க வேண்டும்.. அந்த பெண்ணிற்கு தான் தன் மீது விருப்பம் உள்ளதே என  நினைத்து, அத்துமீறி நடக்க  துணிய கூடாது . அந்த பெண்ணுக்கு தான் தன்னை பிடித்து விட்டதே என்று எண்ணி, அவளை தொட  முற்படுவது உங்கள் மீதான மரியாதையை இழக்க செய்யும். அதுமட்டுமில்லாமல், உங்களிடம் ஒரு பாதுகாப்பு தன்மையை உணர மாட்டார்கள்..முடிவில் பிரிந்து போக நேரிடும்... அதற்காக, ஒரு பெண்ணை தொட்டு கூட பேச கூடாத என்பது அல்ல...ஆனால் ஒரு பெண்ணை தொட்டு பேசும் போது அதில் அன்பு இருக்க வேண்டும்..முதல் தொடுதலே  காமம்  இருக்க கூடாது என்பது தான் முக்கியமே.
திருமணத்திற்கு முன் கர்ப்பம்.. அதன் பின்பு குழப்பம்..
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம் சார்ந்த நடைமுறையில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கமாட்டோம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம். இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது.  ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது. குடும்ப நல அமைச்சகம் இது பற்றிய விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று ஆய்வு நடத்தியது. பின்பு அவர்கள் ‘கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’ என்று கூறி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நகரத்துப் பெண்கள் ஓரளவு விஷயம் தெரிந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தை சிதைத்துவிடும் வழிமுறைகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான கிராமத்து பெண் களுக்கு கர்ப்பத்தை மறைக்கத் தெரிவதில்லை. அந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திற்கு பயந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள். இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது. 16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது.  தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது வாழ்க்கையில் விரக்தியடைகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்களாலேயே வெறுக்கப்படுகிறார்கள். சமூகம் தங்களை மட்டுமல்லாமல் குடும்பத்தாரையும் இழிவாக பேசுவதால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பரிதாபமாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த அறியாப் பெண்களை பெற்றோர்களும் கைவிடுவது ஆபத்தின் உச்சம். பெரும்பாலான வெளிநாடுகளில் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் ஒரு இயல்பான விஷயமாகவே கருதப்படுகிறது. அதனால் அந்நாட்டு பெண்கள் அதனை அவமானகரமானதாக கருதுவதில்லை. எந்த மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை. ஒருவேளை மனஉளைச்சலுக்கு உள்ளாகினாலும், பெற்றோர்களும், மனநல அமைப்புகளும், அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அந்த தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துவிடுகிறது. இங்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் அதனை தனது பெற்றோரிடம் சொல்லவே பயப்படுகிறாள். மகள் அதை சொன்னாலும், உடனே பெற்றோர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி பிரளயத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் தவறான வழியைக்காட்டி அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு சொந்தத்தில் உடனடியாக மாப்பிள்ளை தேடிப்பிடித்து அவசர திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். விடுதிகளில் தங்கிப்படிக்கும் பெண்கள், வேலைக்குப்போகும் பெண்கள், பெற்றோரைப் பிரிந்து உறவினர்களிடத்தில் வசிக்கும் பெண்கள் போன்றோரே திருமணத்திற்கு முன்பு அதிக அளவில் கர்ப்பமடைவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. காதல் என்ற பெயரில் கற்பை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.  காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.
குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் மஹிந்த
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ச கடிதம் மூலம் அனுப்பி அறிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சட்ட விரோத பிரதமர் பதவியை தான் வைத்திருப்பது தனது சுயமதிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே பதவியை இராஜினாமா செய்கிறேன் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக இயக்குனரிடம் வினவ முற்பட்ட போது அவரது தொலைபேசி செயழிலந்து காணப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ள நிலையில், மஹிந்தவின் ராஜினாமா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்தவு ஆதரவான பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு அமைய அடுத்து வரும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை நிரூபித்து மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வார். இதனை முன்னரே அறிந்த கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக 63 உறுப்பினர்கள் மாத்திரமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி : தமிழ்வின்
பொடுகு தொல்லை தீர இப்பவே இதை செய்யுங்கள்....! இதற்கு போய் கவலை படலாமா..?
Sat, 15 Jun 2019 10:10:10 +0530
தேங்காய்ப்பால் அரை கப் எலுமிச்சை சாறு நான்கு தேக்கரண்டி, ஊற வைத்து அரைத்த வெந்தையம் இவற்றை கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும். கரிசலாங்கண்ணி கீரை, முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை பழச்சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் மாதிரி செய்துக்கொண்டு பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு கப் ஆப்பிள் சாற்றுடன், அரை கப் தண்ணீர் கலந்து, தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மிளகு எண்ணெய், தயிர் செம்பருத்தி பூ இவற்றை கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகு தொல்லை நீங்கும். வசம்பை தட்டி சிறிது நல்லெண்ணையில் நன்றாக கருக வறுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர பொடுகு தொல்லை நீங்கும்.முல்தானிமட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக்கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும். தலையில் தயிர் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு பிறகு குளிக்க பொடுகு நீங்கும். பொடுகு தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள், குளிக்க வைக்கும் வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. வசம்பு சாறு, பொடுதலை சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். பொடுதலையை பொடுகு உள்ள தலைக்கு உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் தான் இதற்கு பொடுதலை என பெயர் வந்தது. நாட்டு வெங்காயத்தை உரித்து, அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்தால் பொடுகு நீங்கும்.  வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணையில் காய்ச்சி வடிக்கட்டி அந்த எண்ணெய்யை உபயோகித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். வெள்ளை மிளகு நான்கு தேக்கரண்டி, வெந்தயம் இரண்டு தேக்கரண்டி, இரண்டையும் காய்ச்சாத பசும்பலில் அரைத்து தாளிக்கு பேக்போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்  தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும் .பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கன்டிஷினராகவும் பயன்படும் மேல் குறிப்பிட்டு உள்ள பல டிப்ஸ்ல உங்களுக்கு பிடித்த டிப்ஸ் எதையோ அதனை கொண்டு முயற்சி செய்து பாருங்க.. கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும்.
Popular News

© 2020 Lanka Watch. All rights reserved | Solution by Titum.LK | About Us | Contact Us